பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

உடுமலை : உடுமலை அருகே திருமூர்த்திமலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்வதும், பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக அருவியில் தண்ணீர் அதிகளவு வருகிறது. இதனால் நீர்வரத்தை கண்காணித்து, வனத்துறையினர் அருவிக்கு பொதுமக்களை அனுமதித்து வருகின்றனர்.

நேற்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அருவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீர்வரத்து குறைந்ததும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: