கட்டபெட்டு வனச்சரகத்தில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள் பொருத்தம்

ஊட்டி : கட்டபெட்டு வனச்சரக பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்க குடியிருப்புகளை ஒட்டி 25 கேமராக்கள் பொருத்தப்பட்டன.வனபரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி வனகோட்டம் , கூடலூர் வன கோட்டம் என பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனங்களில் புலி, யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

மேலும் விலையுயர்ந்த மரங்கள் உள்ளிட்டவைகளும் உள்ளன. வனம் ஆக்கிரமிப்பு, வனத்ைத ஒட்டிய தேயிலை தோட்டங்களில் அதிகரிக்கும் காட்டேஜ்கள், வனங்களுக்குள் செல்லும் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்வது வனவிலங்குகள் சென்று வர கூடிய பாதைகளில் வேலிகள், மின்ேவலிகள் போன்றவைகள் அமைப்பதால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வர கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும் வனவிலங்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாததால் வன விலங்குகள் ஊருக்குள் புக கூடிய சூழல் நிலவி வருகிறது. மனிதன் - வன விலங்குகள் மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கரடி, காட்டுமாடு மற்றும் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்ைப ஒட்டிய பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை கண்காணித்து அவற்றை வனத்திற்குள் விரட்டும் பணியை வனத்துைறயினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக தொல்லை தரும் கரடிகளை பிடித்து வேறு அடர்ந்த வனங்களில் விடுவிக்கப்படுகிறது. சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதனிடையே கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கட்டப்பெட்டு வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 25 கேமராக்களை பொருத்தினர். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிக்கு வரும் உலா வரும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: