×

பல்லடம் அருகே கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்திய 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பல்லடம் :  பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல்லடம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் எடுத்துச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வேனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் எடுத்து வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வாங்கி வந்ததாகவும், அதனை தனித்தனி குடோன்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்ததின் அடிப்படையில் கோடங்கிபாளையம் பகுதியில் வேனில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் மற்றும் பாப்பம்பட்டி, பெரியகுயிலி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியம் பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் மற்றும் 5 வேன்களை கைப்பற்றினர்.

இதில், சம்பந்தப்பட்ட பல்லடம் மாணிக்காபுரம் கோல்டன் சிட்டி சுயம்புலிங்கம் மகன் அரவிந்த்ராஜ்(25) , கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜான்சன் மகன் ஜான் சஜூ(30), திருச்சி மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த மணி மகன்  கவின்(24) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 2109 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Van ,Karnataka ,Palladam , Palladam, Tobacco products, Seized
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...