வெளுத்து வாங்கும் கனமழை!: தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்பட 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு முழுக்க பரவலாக மழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், வேலூர், விழுப்புரம், கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, தருமபுரி, திருச்சி, சேலம், தேனி, கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பத்தூர் மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: