செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது 2 காவலர்கள் பெற்றனர்: கமிஷனர் பாராட்டு

சென்னை: சென்னை  காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் அவர்களது தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது போலீசாரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “நட்சத்திர காவல் விருது’’ பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த செப்டம்பர் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மற்றும் அக்டோபர் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெரினா காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பாலமுருகன் ஆகியோரை நேற்று நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ.5,000 பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Related Stories: