விஜய் சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி: டிசம்பரில் வெளியாகிறது

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்துக்கு டிஎஸ்பி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் இயக்கி வந்தார். இந்த படம், விஜய் சேதுபதியின் 46வது படமாகும். இதற்கு விருச்சன் என தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தனர்.  இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு கிரித்திவாஸ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஷிவானி நாராயணன் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. படத்துக்கு டிஎஸ்பி என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் டிஎஸ்பி கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

Related Stories: