கோவை விமான நிலையத்தில் 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் 7.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து கடந்த புதன்கிழமை (9ம் தேதி) இரவு 8.05 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சில பயணிகள் தாங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் அளவை விட அதிகளவு தங்கம் வைத்திருந்தனர். இதையடுத்து பெண்கள் உட்பட சுமார் 20 பயணிகளிடம் ரூ.4 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவர்களிடம் அதற்குரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Related Stories: