×

மேலும் 4 வழக்கில் சவுக்கு சங்கர் கைது

கடலூர்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில் மீண்டும் 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கடலூர் மத்திய சிறையில் போலீசார் நேற்று வழங்கினர்.

Tags : Chavku Shankar , Chavku Shankar arrested in 4 more cases
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து...