தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் ரூ.680 உயர்ந்தது: மீண்டும் சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே நேரத்தில் அதிரடியாக குறைந்தும் வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4758க்கும், சவரன் ரூ.38,064க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 9ம் தேதி ஒரு சவரன் ரூ.38,520 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,820க்கும், சவரன் ரூ.38,560 ஆகவும் விலை உயர்ந்து காணப்பட்டது.இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,875க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.39,000க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,905க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,240க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1176 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Related Stories: