×

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிப்பை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து தமிழக அரசு, அக்டோபர் 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவில், போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர். அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து 3 வாரங்களில் தமிழக அரசும், போக்குவரத்து துறை ஆணையரும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Govt , Case against increase in fines for traffic violations: Court orders Govt to respond
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...