×

மோசடி கும்பல்களிடம் இருந்து 3,900 ஏக்கர் நதி நிலம் உபி.யில் அதிரடி மீட்பு

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில் கங்கை, ராம்கங்கை நதிகள் பெயரில் பதிவான ரூ.300 கோடி மதிப்பிலான 3,912 ஏக்கர் நிலம். நில மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் கங்கை நதி 15 கிமீ, ராம்கங்கை நதி 40 கிமீ தூரம் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ரஷீத் அலி நடத்திய ஆய்வில் ஜலாலாபாத், காலன் தாலுகாக்களில் கங்கை, ராம்கங்கை நதிகளின் பெயரில் கடந்த 1952ம் ஆண்டு நிலங்கள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், 40 பேர் கொண்ட நில மோசடி கும்பல், இந்த நதிகளின் 3,912 ஏக்கர் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததும், இவற்றின் பேரில் வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தனது அதிரடி நடவடிக்கையின் மூலமாக, இந்த கும்பலிடம் இருந்து ரூ.300 கோடி மதிப்பிலான 3,912 ஏக்கர் பகுதியை அரசு மீட்டுள்ளது.

Tags : UP , Recovery of 3,900 acres of riverine land from fraud gangs in UP
× RELATED ஆரோக்கியத்தின் திறவுகோலாகும் மலர் மருத்துவம்!