இலுப்பூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 மலை பாம்பு பிடிபட்டது

விராலிமலை: புதுக்கோட்டை மாவ ட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையை சேர்ந்த  பழனிவேல் என்பவரது வீட்டின்  அறையில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று புகுந்து  இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பழைய சாமான்கள் அடுக்கி வைத்திருந்த அறைக்குள் புகுந்து பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர்.

இதே போல் அருகே உள்ள கூவட்டுபட்டியில்  ஒரு வீட்டின் அருகே மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பையும் பிடித்தனர். பிடித்த இரண்டு மலைப்பாம்புகளையும் சாக்கு பையில் கட்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஒரே இரவில் இரண்டு மலைப்பாம்புகள் சிக்கியது இலுப்பூர் பகுதி குடியிருப்புவாசிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: