×

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ரூ.18 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

குளச்சல்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.18 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 16  உண்டியல்கள்   நேற்று திறந்து எண்ணும் பணி நடந்தது. குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள், பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.17 லட்சத்து 68 ஆயிரத்து 994 ரொக்கமாகவும், 70 கிராம் தங்கம், 301 கிராம் வெள்ளி, சவுதி அரேபியா ரியால் 20, சிங்கப்பூர் டாலர் 50, கத்தார் ரியால் 1, ஓமன் ரியால் 2 ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

Tags : Mandaikkadu Bhagavatiyamman temple , Collection of Rs.18 lakhs in money donation in Mandaikkadu Bhagavatiyamman temple
× RELATED மண்டைக்காடு பெரிய சக்கர தீவெட்டி கமிட்டி மோதலில் 35 பேர் மீது வழக்கு