×

விழுப்புரத்தில் நான்குமுனை சந்திப்பில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

விழுப்புரம்; விழுப்புரம் நகரப்பகுதியின் விரிவாக்க பகுதிகளான மகாராஜபுரம், வழுதரெட்டி, எருமனந்தாங்கல், காககுப்பம், சாலாமேடு, பாண்டியன் நகர், விகேஎஸ் லட்சுமி நகர், ஸ்ரீகணேசா நகர், ஆசிரியர் நகர் பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகள் கடந்த பழைய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடித்து செயல்பாட்டில் உள்ளன. இதனை அடுத்து நீண்ட காலத்துக்கு பிறகு புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு 260 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கினர்.  

இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒர் ஆண்டாக பணிகள் தொடர்ந்து முழவீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்கியதால் பாதாள சாக்கடை பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் கோடையில் தொடங்க உள்ள நிலையில் விழுப்புரத்தில் பெரும்பால பகுதிகளில் உடைக்கப்பட்ட சாலைகளால்  பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாதாள சாக்கடை பணியில் ஆள் இறங்கும் குழிப்பகுதிகளின் மேலே போடப்பட்ட மூடிகள் தரமற்றதாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

Tags : Villupuram , Sudden pothole at four-way junction in Villupuram: Motorists panic
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...