ஜம்மு காஷ்மீரில் இன்று காலை வெளிநாட்டு தீவிரவாதி சுட்டுக் கொலை

ஷோபியான்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டதால் இன்று காலை அவனை என்கவுன்டரில் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

அவனிடம் இருந்து வெடிபொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை கூறுகையில், ‘குல்காம்-ஷோபியான் பகுதியில் செயல்பட்ட கம்ரன் பாய் என்ற ஹனீஸ் என்ற வெளிநாட்டு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்’ என்று கூறியுள்ளது.

Related Stories: