கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்பதே தமது ஆட்சியின் கொள்கை: பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

திண்டுக்கல்: கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்பதே தமது ஆட்சியின் கொள்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி உரையாற்றினார். கிராமபுறத்துக்கும், நகர்புறத்துக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தியின் கனவுகள் நனவாக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு கண்ணாடி இழை தகவல் தொடர்பு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: