×

தமிழகத்துக்கு நிகர் தமிழகமே செங்கை பத்மநாபன் அறிக்கை

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தில்  பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு  செல்லும்  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.  மற்ற பிரிவினரின் இடஒதுக்கீடு சமூகநீதியின்  உச்சகட்ட சிறப்பு. அனைத்து மாநிலங்களில்  தமிழகத்துக்கு நிகர் தமிழகமே. அதே நேரத்தில்  பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில்  பின்தங்கியோரை மேம்படுத்த  முயற்சிப்பது சமூகநீதிக்கு எதிரானதல்ல.  தனக்கு வேண்டும்  என்று கேட்பது தவறல்ல.  ஆனால் மற்றவர்களுக்கு தரக்கூடாது என்று வாதிடுவது மிகப்பெரிய  மனித உரிமை மீறல்.

சமூகநீதி  போற்றும் கட்சிகளுக்கு அது சிறப்பல்ல. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு பதிலாக ரூ.2.5 லட்சமாகவும், 5 ஏக்கர்  நிலத்துக்கு பதிலாக 1 ஏக்கராகவும் 1000 சதுரடி வீட்டுக்கு  பதிலாக 500 சதுரடி வீடாகவும் குறைப்பது தான் உண்மையான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடாக அமையும். வரும் 12ம் தேதி தமிழக  அரசால் கூட்டப்படும் அனைத்துகட்சி கூட்டத்தில் எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Sengai Padmanaban ,Tamil Nadu , Sengai Padmanaban report that Tamil Nadu is similar to Tamil Nadu
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...