மாறி மாறி ஆபாச கருத்துகள் கூறியதால் 2 நடிகைகள் மீதும் வழக்கு: மும்பை போலீஸ் நடவடிக்கை

மும்பை: தங்களுக்குள் மாறி மாறி ஆபாசமான கருத்துகள் கூறிய இரு நடிகைகள்  ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் பொதுதளங்களில் தரக்குறைவாக பேசி விமர்சித்து வருகிறார்கள். நடிகை ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளதாக ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார்.

அதையடுத்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடமில்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: