குஜராத், இமாச்சலில் ரூ.122 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.122 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் நாளை சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் வரும் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பால், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கணக்கில் வராத பணம், மது, போதைப் பொருட்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், இலவச பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது.

அந்த வகையில் இமாச்சல் பிரதேசத்தில் மட்டும் விதிமுறை மீறி கொண்டு செல்லப்பட்ட 50.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், மது, போதைப் பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் குஜராத்தின் ரூ.71.88 கோடி மதிப்புள்ள பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.122.16 கோடி மதிப்புள்ள பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: