முதல் முதலில் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்தது திமுக தான்: ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி..!

சென்னை: இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்டது திமுக என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி; இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்டது திராவிட கழகம் என 10% இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மீது ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஒன்றிய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை திமுக தடுத்துள்ளது. திமுகவிற்கு கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சிகள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம். இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்கு திமுகவே காரணம். 10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. முந்தைய ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி 10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும். ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அண்ணாவின் கருத்து, அதன் அடிப்படையிலேயே அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

குறைகூறுவதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றாள் அவர்களது பாவங்களை மக்கள் மன்னிப்பார்கள். அரசியல் அமைப்புக்கு தலைமை தங்கியவரே வில்சன் வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். மோடி அரசை திருப்திப்படுத்தவே 10% இடஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மாரு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் இவ்வாறு கூறினார்.

Related Stories: