×

சித்தூர் மேற்கு வனத்துறை அலுவலகத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்த வனத்துறை ஊழியர்களுக்கு மரியாதை

சித்தூர் : சித்தூர் மேற்கு வனத்துறை அலுவலகத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்த வனத்துறை ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
சித்தூர் மேற்கு வனத்துறை அலுவலகத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தினத்தை முன்னிட்டு வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. அவர்களின் படத்திற்கு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வனத்துறை அதிகாரி ரெட்டி தலைமை தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது: ஆந்திர மாநிலம், ராஜமன்றி மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎப் அதிகாரி சீனிவாஸ் தமிழகம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணியாற்றி வந்தார். அவரை சந்தனமர கடத்தல் மன்னன் வீரப்பன் கடந்த 1991ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி சுட்டு கொலை செய்தார். அவரது வீரமரணத்தை 1991ம் ஆண்டு முதல் வனத்துறை ஊழியர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை நம் இந்திய அரசு மற்றும் மாநில அரசு நிலவி கூர்ந்து வருகிறது. அதேபோல், வனத்துறை சார்பில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவை கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, 1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம்.

சித்தூர் மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு சந்தனமரங்களை கடத்துபவர்களை  பிடிக்க தர் எனும் அதிகாரி மற்றும் வனத்துறை ஊழியர் ஒருவர் 2 பேர் சேர்ந்து சென்றனர். அவர்களை கடத்தல் கார்கள் கொலை செய்தனர். அவர்களின் வீர மரணத்தை சித்தூர் மாவட்ட வனத்துறை ஊழியர்களின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 இவ்வாறு, அவர் பேசினார்.



Tags : Chittoor West Forest Office , Chittoor: Chittoor West Forest Department paid tribute to the forest employees who sacrificed their lives while on duty.
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...