7 பேரையும் விடுதலை செய்யாமல் ஆளுநர் ரவி வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்: திவிக தலைவர் கொளத்தூர் மணி சாடல்

சென்னை: 7 பேரையும் விடுதலை செய்யாமல் ஆளுநர் ரவி வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார் என திவிக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். சனாதனம், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசுவதற்குத்தான் ஆளுநருக்கு நேரம் இருக்கிறது, தனது பணியை செய்ய நேரம் இல்லை என கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

Related Stories: