×

கத்தாரில் வரும் 21ல் உலக கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து வீரர்களுக்கு 50 அடி கட் அவுட் வைத்து கேரள ரசிகர்கள் கொண்டாட்டம்

குன்னூர் : எப்ஐஎப்ஏ 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது.  இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும்.

அதன்படி, குழு ஏ பிரிவில் நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு குழு பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளும், குழு சி பிரிவில் போலந்து, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும், குழு பிரிவில் துனிசியா, டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும், குழு இ பிரிவில் ஜப்பான், ஜெர்மனி, கோஸ்டா ரிகா, ஸ்பெயின் ஆகிய நாடுகளும், குழு எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொரக்கோ, குரோயேஷியா ஆகிய நாடுகளும், குழு ஜி பிரிவில் கேமரூன், சுவிட்சர்லாந்து, பிரேசில், செர்பியா ஆகிய நாடுகளும், குழு எச் பிரிவில் கொரிய குடியரசு, உருகுவே, கானா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும், 12 நாட்கள் நடைபெறும் குழு சுற்றுப் போட்டிகளின் போது, 1 நாளைக்கு 4 போட்டிகள் நடைபெறும். அதோடு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள், கடைசி 16 அணிகள் மோதும். இதில், இறுதி கட்டத்திற்கு முன்னேறும். இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கால் பந்து போட்டியை காண்பதற்கு காத்திருக்கின்றனர்.  கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள் மற்றும் அவர்களின் அணியை ஆதரித்து போஸ்டர்கள் மற்றும் கட்அவுட் வைத்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் கட்அவுட் வைத்து கொண்டாட துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, அர்ஜென்டினா அணியை சேர்ந்த மெஸ்ஸி, போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த ரொனால்டோ மற்றும் பிரேசில் அணியை சேர்ந்த நெய்மர் உள்ளிட்டோர்க்கு 50 அடி கட்அவுட் ராட்சத கிரேன் உதவியுடன் வைத்துள்ளனர். அது மட்டுமின்றி பாலங்களில் அந்த நாட்டின் கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர்.



Tags : Kerala ,21st World Cup football match ,Qatar , Coonoor: FIFA World Cup 2022 is going to be held in Qatar. This competition will start from 21st and last for 28 days
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...