×

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கப்பாதைகள் மூடல்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் கனமழை தொடர்வதால் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கபாதையில் நீர் தேங்கியுள்ளதால் நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது. இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை எழும்பூர் பகுதிப்பட்ட தமிழ் சாலை - காந்தி இர்வின் சாலை சந்திப்பில் (உடுப்பி பாய்ண்ட்) 11.11.2022 அன்று  10.00 மணி முதல் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு சாலை வெட்டும் பணி நடைப்பெறுவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பமுகிறது.

மழைநீர் தேங்கியுள்ளதால் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கபாதையில் நீர் தேங்கியுள்ளதால் நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது. அதன் காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சூரப்பட்டு  வினாயகபுரம் சுரங்கபாதை வழியாக செல்லும் வாகனங்களையும் 100 அடி மேம்பாலம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து பேருந்துகள் தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி தமிழ் சாலை வழியாக -காசா மேஜர் சாலை செல்லாம் சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து பேருந்துகள் தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி எழும்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து பேருந்துகள் ஹாரிஸ் சாலையில் இருந்து  வரும் வாகனங்கள் பாந்தியன் ரவுண்டாவிலிருந்து பாந்தியன் சாலை வழியாக செல்லலாம். சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து பேருந்துகள் ஈ.வே.ரா. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நாயர் மேம்பாலம் வழியாக  செல்ல அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக நேராக ஈ.வே.ரா. சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.


Tags : Chennai , 2 tunnels closed in Chennai due to waterlogging: Police notification
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?