×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதி துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால தடை விதிக்க கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ்கன்னா, ஜெ.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் விமரிசிக்க அனைவருக்கு உரிமை உண்டு, ஆனால் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான வழிமுறைகள் என்பது உண்டு. அந்த வழிமுறைகளில் மட்டுமே எதையும் விமர்சனம் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் மனுதாரர் எவ்வளவு நாட்கள் சிறையில் உள்ளார், அவரது பின்னணி குறித்து நீதிபதிகள் விசாரித்தனர். இதனை தொடர்ந்து தற்போது சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுமீது பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளருக்கும் ட்விட்டர், பேஸ்புக், யூடியுப் உள்ளட்ட மின்னணு தகவல் தொழில்நுட்ப செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறையில் இருந்து வெளிய வந்து அடுத்த விசாரணை வரை அவர் எந்த கருத்துக்களையும் சமூக ஊடகங்களிலோ, பேட்டியிலோ தெரிவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


Tags : Supreme Court ,Chavik Shankar , Contempt of court case, Chavku Shankar, interim stay on jail sentence, Supreme Court order
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...