×

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..!!

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூரபட்டு விநாயகபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சூரபட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் 100 அடி மேம்பாலம் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மேம்பாலம் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai, Rainwater, Tunnels, Traffic Police
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?