பெய்யும் மழையால் மண் குளிர்ந்ததை போல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்ததால் என் மனமும் குளிர்ந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர்: பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது; விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய நாளாக இந்நாள் உள்ளது. ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல, செயல்படுத்தும் அரசு திமுக அரசு என கூறினார்.

Related Stories: