×

இஸ்ரோ சோதனை வெற்றி எல்விஎம்-3 ராக்கெட்டின் சுமக்கும் திறன் அதிகரிப்பு: 450 கிலோ கூடுதலாக எடுத்து செல்லும்

பெங்களூரு: இந்தியாவின் அதிக எடை கொண்ட எல்விஎம்-3 ராக்கெட், கூடுதலாக 450 கிலோவை சுமந்து செல்லும் வகையில் கிரையோஜனிக் இன்ஜினின் திறன் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக எடை கொண்ட எல்விஎம்-3 ராக்கெட் மூலம், கடந்த மாதம் 23ம் தேதி 5.8 டன் கொண்ட 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, இந்த ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், எல்விஎம் -3 ராக்கெட் கூடுதலாக 450 கிலோ சுமந்து செல்லும் வகையில், அதன் கிரையோஜனிக் இன்ஜினின் திறன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் எடையை சுமந்து செல்லும் இதன் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எல்விஎம்-3 ராக்கெட்டின் சுமக்கும் திறன் 21.8 டன்னாக அதிகரித்து, நேற்று மேற்கொண்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த ராக்கெட் இன்ஜினின் முதல் 40 நொடி சோதனையில் 20 டன் சுமையை உந்தி தள்ளும் திறன் வெளிப்பட்டது. தற்போது, ராக்கெட்டில் கூடுதலாக 450 கிலோ எடையை கூடுதலாக சுமந்து செல்ல முடியும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : ISRO , ISRO test-successful LVM-3 rocket's payload increase: 450 kg more
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...