மக்களவை இடைத்தேர்லில் அகிலேஷ் மனைவி போட்டி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மெயின்புரி மக்களவை தொகுதி எம்பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து, இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இந்த தொகுதியின் வேட்பாளராக  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், அறிவிக்கப்பட்டு உள்ளார். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இது வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை கன்னூஜ் தொகுதி எம்பியாக டிம்பிள் இருந்தார்.

Related Stories: