ஆதார் ஆவணங்களை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்: ஒன்றிய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி: ஆதார் ஆவணங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் வங்கி கணக்கு உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் அவசியமானதாகும். இந்நிலையில், ஆதார் அமைப்பான உதய், கடந்த மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. மக்கள் தங்களின் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், ஆதார் ஆவணங்கள் தொடர்பான விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுபட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தங்களின் அடையாள சான்று, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஆதார் தொடர்பான துல்லியமான தகவல்கள் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: