அமெரிக்க விசா காத்திருப்பு காலம் குறைகிறது

புதுடெல்லி: ‘அமெரிக்க விசாவுக்கான காத்திருப்பு காலம் அடுத்தாண்டு மத்தியில் குறையும்,’ என்று அமெரிக்க துாதரக அதிகாரி தெரிவித்தார். இது குறித்து அமெரிக்க துாதரக உயர் அதிகாரி நேற்று கூறியதாவது: விசா வழங்குவதில் இந்தியாவுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஆண்டு மத்திக்குள் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போல், அதிக எண்ணிக்கையில் விசாக்கள் வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இருந்து தான் விசா விண்ணப்பம் அதிகரித்துள்ளன. குறிப்பிட்ட சில விசாக்களுக்கான காத்திருப்பு காலம் 14 மாதங்களாக இருந்த நிலையில், அது 9 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு கோடைக்காலத்திற்குள் 12 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: