சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல், பதிவு போர்ட்டல் நகல் இணையதளம் மூலம் பெறலாம்: கலெக்டர் அலுவலகம் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக, மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களான படுக்கை மற்றும் காலை உணவு  நிறுவனங்கள் மற்றும் விருந்தினர்  இல்லம் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்குதல், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள், கேம்பிங் ஆபரேட்டர்கள், கேரவன் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் கேரவன்  பார்க் ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்காக அரசாணைகள்  வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவு போர்ட்டலின் நகலை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு சுற்றுலா ஆபரேட்டர் பதிவினை www.tntourismtors.com இணையதளம் மூலம் பெறலாம்.

தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்த தொழில்முனைவோர்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மேலும் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும். தமிழக அரசின் சுற்றுலாத்துறையில் சுற்றுலா தொழில்முனைவோர் பதிவு செய்வதற்கான இணையதளம் மற்றும் தொடர்பு அலுவலகம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட சுற்றுலா அலுவலரின் 044-25333358 அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது 9176995863 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது tochn2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: