வந்தே பாரத் ரயில் அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு -  சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான இயக்கம் நாளை முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் - மைசூரு -  சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூரு ஆகிய இரு இடங்களிலிருந்தும் நவம்பர் 12ம் தேதி முதல் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான எண்.20607/20608.ெசன்னை சென்ட்ரல் - மைசூரு -  சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் (புதன்கிழமை தவிர) 2முனைகளிலிருந்தும் இயக்கப்படும்.

இரண்டு சேவைகளுக்கும் காட்பாடி  மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூருவில்  மட்டுமே நிறுத்தப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே காலை 5.50 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 7.21 முதல் 7.25 வரை நிற்கும் மற்றும் காலை 10.20 முதல் 10.25 வரை பெங்களுருசென்றடையும். பின்னர் மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும். மைசூரு- சென்னை இடையே மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு பெங்களுருவுக்கு மதியம் 2.55 முதல் 3 மணிக்கு சென்றடையும். காட்பாடிக்கு மாலை 5.36 முதல் 5.40 மணிக்கு சென்றடையும். இறுதியாக, சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.

Related Stories: