×

கொடுமுடியாறு நீர்த்தேக்கம், மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியீடு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு 11.11.2022 முதல் 31.03.2023 முடிய 141 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 2756.62 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு  நீர்த்தேக்கத்தில் இருந்து 11.11.2022  முதல் 10.03.2023 வரை 120 நாட்களுக்கு, நாள் ஓன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.   இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில்  உள்ள 5780.91 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும்.    
    
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள 18-ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 95 கனஅடி வீதம் 11.11.2022 முதல் 15 நாட்களுக்கு மொத்தம் 121 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

Tags : Manimutharai Dam , Issue of government order to release water from Kodumudiyar Reservoir, Manimutthar Dam
× RELATED அணையில் 98 சதவீதம் நீர் இருப்பு...