அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-ம் இடம் பிடிக்கும்: அமெரிக்க தூதரக அதிகாரி தகவல்

டெல்லி: அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறி வருகிறது.

இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு இந்தியா தான் இப்போது முதலிடத்தில் உள்ளது.

மாணவர்கள், உயர் தொழில்நுட்பப் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகளில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்கு அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் நியமனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஹெச் - எல் விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்காக கடந்த அக்டோபரில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நியமனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: