பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருகம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பின் இருவரையும் பணிநீக்கம் செய்த மாநகர காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது. விசாரணை விதிகள், இயற்கை நீதி முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரிதான் என நீதிமன்றம் கூறியது.

Related Stories: