×

டி20 உலக கோப்பை 2-வது அரையிறுதி போட்டி: இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

அடிலெய்டு: டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள்  லோகேஷ் ராகுல்(5) 5, ரோகித் சர்மா(28) 27 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து வந்த விராட் கோலி(40) 50 எடுத்தார், சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தனர். இறுதியாக இந்திய 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளார். இதுதொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.


Tags : T20 World Cup ,India ,England , T20 World Cup 2nd semi-final: India set England a target of 169 runs to win
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...