தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிகமிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: