கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை விசாரணை

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீபகலமாக சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் இங்குள்ள ஒரசோலை காமராஜர் நகரில் ஆடு, வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது.  இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு தேயிலைத்தோட்ட முட்புதரில் தூர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தபோது ஒரு ஆண் சிறுத்தை

இறந்து கிடந்தது தெரியவந்தது. அது இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் அதற்கு 6 முதல் 7 வயது இருக்கலாம் என்றும் வனத்துறையினர் கூறினர். சிறுத்தை இறப்புக்காக காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே கூறமுடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: