×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை விட அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

Tags : WATERRANCH Hills ,Kutalam Fasteners , Torrential rains in the Western Ghats: Water gushes over the Kurdalam waterfalls
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...