குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிவாபா ஜடேஜா, ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் 89 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார்.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது. குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

குஜராத் முதல்வ பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் களமிறக்கப்படுகிறார்.

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு சென்ற ஹர்திக் படேல், விரம்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட மோர்பி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.-க்கு மீண்டும் சீட் வழங்க பாஜக மறுத்துவிட்டது.

Related Stories: