ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முதுநிலை சட்டப்படிப்பு கலந்தாய்வாய் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தரப்பில் எதுவும் விளக்கம் கேட்கவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்கும் பட்சத்தில் நிச்சயம் விளக்கம் அளிக்கப்படும். 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, விளக்கம் அளித்துள்ளோம்.

ஆளுநரிடம் கையெழுத்து போடுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு தேவை இல்லை. 10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழக எல்லைக்குள் காவல் நிலையம் அமைத்துள்ளதாக எழும் புகார்கள் குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதை எடுக்க வேண்டுமோ அதனை நிச்சயமாக எடுப்போம் என்றும் கூறினார்.

Related Stories: