சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?.. தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அடையாளம் காணப்பட்டதாக தகவல்

சென்னை: சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக 5 பேர் மீது புகார் எழுந்தது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின் படி சென்னை நகர் முழுவதும் காவல்துறையினர் தனியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடந்து வரும் நிலையில் தமிழக காவல்துறையினரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியலை தமிழக காவல்துறை தயார் செய்கிறது.

Related Stories: