புழல் சிறை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் பாழடைந்து வரும் கட்டிடம்: சீரமைக்க வலியுறுத்தல்

புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய அலுவலக கட்டிடம் உள்ளது. இது, பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருகிறது. பல அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பித்து அரசு அலுவலங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, மாநகராட்சி மாதவரம் மண்டலம், 23வது வார்டு பகுதி உள்ள மக்களுக்கு மின்சார அலுவலகம், செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல் கிராமத்தில் உள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு மின்சாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே, பாழடைந்து வரும் இந்த அரசு கட்டிடத்தை புதுப்பித்து கிராண்ட் லைன் மின்சார வாரிய அலுவலகத்தை இங்கு அமைத்தால் 23வது வார்டு புழல் கன்னடபாளையம், பாலாஜி நகர், கண்ணப்ப சாமி நகர், காவாங்கரை, திருமலை நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்டநகர், சக்திவேல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராண்ட் லைன் பகுதிக்கு மின்வாரிய அலுவலகம் கொண்டு வர வேண்டுமென புழல் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: