மாதவரத்தில் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

திருவொற்றியூர்: சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதவரத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் பட்டியலில் பிஎல்ஏ 2 படிவங்களை சமர்ப்பித்தல், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் கட்சியின் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், பகுதி திமுக செயலாளர்கள் துக்காராம், புழல் நாராயணன், தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், வை.ம.அருள்தாசன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கருணாகரன், தயாளன் மற்றும் நிர்வாகிகள் ராமநாதன், ராமகிருஷ்ணன், அறிவழகி பாலகிருஷ்ணன், ஆனந்தன் மற்றும் மாவட்ட, பகுதி, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: