அமெரிக்க இடைத்தேர்தலில் இந்தியர்கள் அதிகம் பேர் வெற்றி: 4வது முறையாக எம்பியானார் தமிழக வம்சாவளி பிரமிளா

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த பிரமிளா ஜெயபால் உட்பட 4 இந்திய வம்சாளிகள் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட், பிரதிநிதிகள் சபை என 2 அவைகள் உள்ளன. இதில் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். இதற்கானதேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலும், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். 435 உறுப்பினர்களைக் பிரதிநிதிகளை கொண்ட அவைக்காக நடந்த இடைத்தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரான சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் கிளிப் மூனை வென்றுள்ளார். பிரதிநிதிகள் அவையில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் இந்திய வம்சவாளி இவர் மட்டுமே.

இதே போல், மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக வென்ற இந்திய வம்சாவளி என்ற சாதனையை தனேதர் படைத்துள்ளார். இல்லினோனிஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து 4வது முறையாக வென்று எம்பியாகி உள்ளார்.

 சிலிக்கான் வேலி மாகாணத்தில் ரோ கண்ணா, குடியரசு வேட்பாளரை வென்றுள்ளார். கண்ணா, கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா மூன்று பேரும் 4வது முறையாக எம்பியாகி உள்ளனர். இதுதவிர, கலிபோர்னியாவில் அமி பேரா 6வது முறையாக வெற்றி பெறும் நிலையில் முன்னிலையில் உள்ளார். மேரிலாண்டில், ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணா மில்லர் வெற்றி பெற்று துணை நிலை ஆளுநராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற வரலாற்றை படைத்துள்ளார். அங்கு தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடக்கிறது.

Related Stories: