ஆண்டு இறுதி நம்பர் 1 இகா உற்சாகம்

போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லத் தவறினாலும், ஆண்டு இறுதி தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் 11085 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் (5055), அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா (4691), பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (4375), பெலாரஸின் அரினா சபலென்கா (3925) அடுத்த இடங்களில் உள்ளனர். சீசன் முடிவு நம்பர் 1 அந்தஸ்தை முதல் முறையாக பெற்றுள்ள இகா, அதற்கான கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

Related Stories: