×

இந்திய கடற்படையை கண்டித்து 3 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகப்பட்டினம்: மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து  நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று  முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 15ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி இந்திய கடற்படை அதிகாரி காமண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தம் தொடங்கினர். நாளை வரை போராட்டம் நடக்கிறது. இதனால் 25 மீனவ கிராமங்களில் இருந்து 600 விசைப்படகுகள், 3,500 பைபர் படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் 70 ஆயிரம் மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வரத்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Indian Navy , Indian Navy, Kanditu, 3 district fishermen, strike
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...