×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னை: மழை மற்றும் வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் லாரிகளில் அனைத்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. ஒரு கிலோ நாட்டு தக்காளி 25ல் இருந்து 15க்கும் நவீன் தக்காளி 30ல் இருந்து 20க்கும் சின்ன வெங்காயம் 120ல் இருந்து 100க்கும் கேரட் 60ல் இருந்து 35க்கும் பீன்ஸ் 80ல் இருந்து 30க்கும் கத்தரிக்காய் 30ல் இருந்து 15க்கும் புடலங்காய் 30ல் இருந்து 15க்கும் முருங்கைக்காய் 120ல் இருந்து 80க்கும் வெண்டைக்காய் 30 இருந்து 20க்கும் சவ்சவ் 25 இருந்து 15க்கும் முள்ளங்கி 25 இருந்து 12க்கும் பீரக்கங்காய் 30ல் இருந்து 20க்கும் எலுமிச்சை 90ல் இருந்து 50க்கும் நூக்கல் 25ல் இருந்து 15க்கும் பச்சைமிளகாய் 45ல் இருந்து 30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Koyambedu , Prices of vegetables plummet in Koyambedu market: Housewives are happy
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் திறந்தவெளி பூங்கா