ஆவின் நிறுவனம் மீது தவறான தகவல்கள் பரப்புகின்றனர் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் பாஜ போராட்டத்துக்கு கண்டனம்

சென்னை: ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்பிவிட்டு போராட்டம் அறிவித்துள்ளது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தியமைக்காக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நன்றியினை தெரிவித்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அளித்தனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 உயர்த்திக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி. ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்பி பாஜக போராட்டம் அறிவித்துள்ளதாகவும் பாஜ ஆளும் மாநிலங்களில் பால் விலை எந்த அளவு என்பதை தமிழக பாஜ தலைமை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்ய வேண்டாம். பால் முகவர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்திற்கு ஏஜெண்டும் இல்லை, உற்பத்தியாளரும் இல்லை. அதே போல் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியதை மேலும் கூடுதலாக உயர்த்தித்தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: